ஜாபர் சேட்டின் மனைவி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலர் மகளின் 14.23 கோடி சொத்துக்கள் முடக்கம்!

 
ஜாபர் சேட்

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி, முன்னாள் முதல்வரின் செயலர் ராஜமாணிக்கத்தின் மகள் ஆகியோருக்குச் சொந்தமான 14.23 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முடக்கியுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர் மற்றும் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்‌ஷன் உரிமையாளரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளருமான ராஜமாணிக்கத்தின் மகள் துர்கா சங்கர் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். சட்டவிரோத பணிப் பரிமாற்ற வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி உட்பட 3 பேரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜாபர் சேட்

இது குறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர், தமிழக முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகள் துர்கா சங்கர், லேண்ட் மார்க் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.14.23 கோடி சொத்துகள் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாபர் சேட்

இது மட்டுமல்லாமல் பணியில் இருக்கும் பொழுது ஆளும் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளில் சாதகமாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு மணல்மேடு சங்கருக்கு ஆதரவாக முட்டை ரவியை என்கவுண்டர் செய்தார் என்ற குற்றச்சாட்டு சவுக்கு சங்கரின் பணி நீக்கத்திற்கு காரணம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web