தீபாவளியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட 143 கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவு!

 
தீபாவளி

தீபாவளிப் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில், குஜராத் மாநிலத்தில் தகுதியுள்ள 143 கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

View this post on Instagram

A post shared by Sandesh News (@sandeshnews)

குஜராத் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில், 60 வயதுக்கு மேற்பட்ட 103 ஆண் கைதிகள் மற்றும் 40 பெண் கைதிகள் என மொத்தம் 143 பேர் இந்த பரோல் சலுகைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நவம்பர் 6-ம் தேதி தன்தேரஸ் நாளில் இருந்து 15 நாட்கள் பரோலில் வெளியே வர உள்ளனர்.

சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் கைதிகள் நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு முதல் குஜராத் அரசு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு தகுதியுள்ள கைதிகளுக்கு 15 நாள் பரோல் வழங்கி வருகிறது.

ஜார்கண்ட் சிறை

எனினும், பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் இந்த சலுகைக்குத் தகுதி பெற மாட்டார்கள். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளவர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த கைதிகள் மற்றும் குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கும் இந்தச் சலுகை கிடையாது என சிறைத்துறை தெரிவித்துள்ளது.