1,431 கிலோ பூசணிக்காயில் பிரம்மாண்ட ஹாலோவீன் விளக்கு! அமெரிக்காவில் புதிய கின்னஸ் சாதனை

 
பூசணிக்காய்

 

அமெரிக்காவில் 1,431.5 கிலோ எடையுள்ள ராட்சத பூசணிக்காயை ஹாலோவீன் விளக்காகச் செதுக்கி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சேலம் நகரில் இந்த பிரம்மாண்ட விளக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ரோட் தீவைச் சேர்ந்த விவசாயி ரான் வாலஸ் வளர்த்த இந்தப் பூசணிக்காய், கடந்த அக்டோபர் 10-ம் தேதி நடைபெற்ற எடைப் போட்டியில் 3,156 பவுண்டுகள் எடை கொண்டதாகப் பதிவு செய்யப்பட்டு, உலகின் அதிக எடையுள்ள பூசணிக்காய் என்ற சாதனையைப் பெற்றது.

பின்னர், 'ரைசிங் கேன்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் டாட் கிரேவ்ஸ் மற்றும் அவரது குழுவினர் இதனை ஹாலோவீன் விளக்காக மாற்றும் பணியில் ஈடுபட்டனர். தொழில்முறை சிற்பிகளுடன் இணைந்து சுமார் 32 மணி நேரம் உழைத்து, சூனியக்காரி, எலும்புக்கூடு, பறக்கும் வவ்வால்கள் உள்ளிட்ட உருவங்களைச் செதுக்கினர்.

Heaviest jack o'lantern carved from pumpkin weighing 2,560 pounds | Guinness World Records

இதன் மூலம் அதிக எடையுள்ள ஹாலோவீன் விளக்கு என்ற புதிய கின்னஸ் சாதனையும் உருவானது. 2023-ம் ஆண்டு டிராவிஸ் ஜியெங்கர் உருவாக்கிய 1,246.9 கிலோ விளக்கின் சாதனை இதனால் முறியடிக்கப்பட்டது.சேலம் நகரின் 400-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் காட்சிப்படுத்தப்பட்ட இந்த விளக்கை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.