இன்று முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு! வாடகை வாகனங்களுக்கு நுழைய அனுமதியில்லை!

 
144 தடை

இன்று  முதல் அக்டோபர் 31ம் தேதி வரையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அம்மாவட்ட ஆட்சியர் மதுசூதன் 144 (1) தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாளை அக்டோபர் 24ம் தேதியன்று மருதுபாண்டியர்களின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதே போல், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அக்டோபர் 27ம் தேதியன்று மருது பாண்டியர்களின் குருபூஜை நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நாளை திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபம் மற்றும் நினைவுத் தூண் ஆகிய இடங்களுக்கு சமுதாய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் சென்று மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக நகராட்சி ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் 6  பேரும் பிற அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

மருது சகோதரர்கள்

இந்நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்த வருபவர்கள்காவல் துணை கண்காணிப்பாளரிடம் முன் அனுமதியை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், வாகனத்தின் எண், ஆர்.சி. புத்தகத்தில் நகல், இன்சூரன்ஸ் நகல், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டையின் நகல், வாகனத்தில் பயணம் செய்பவர்களின் பெயர் மற்றும் முழு முகவரி ஆகியவற்றை இணைத்து விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும்.

மரியாதை செலுத்த வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டும் வர அனுமதி அளிக்கப்படும் என்றும், வாடகை வாகனங்கள், வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள் போன்றவை உள் நுழைய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து  பயணம் செய்யக் கூடாது என்றும், மரியாதை செலுத்த வரும் வழித்தடங்களில் பட்டாசுகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருது சகோதரர்கள்

அனுமதி பெற்றவர்கள் அவர் களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்வதுடன், வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்த கூடாது. தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். மரியாதை செலுத்த வருபவர்கள் ஊர்வலமாக செல்ல அனுமதியில்லை. அதே சமயம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ப்ளக்ஸ் போர்டுகளையோ, பேனர்களையோ எங்கேயும் வைக்கவும் அனுமதி இல்லை என்றும்  தெரிவிக்கபட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web