படகு கவிழ்ந்து பயங்கர விபத்தில் 145 பேர் பலி !!

 
boat

ஆப்பிரிக்கவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள காங்கோ நாடு, ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். இந்த நிலையில் காங்கோவில் நிகழ்ந்த கோர விபத்து உலகளவில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. 200 பயணிகளுடன் சென்ற மோட்டார் படகு லுலோங்கா ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்தில் 145 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பசன்குசு நகருக்கு அருகே பயணிகள் மோட்டார் படகில் காங்கோ குடியரசுக்கு சென்று கொண்டிருந்தனர். படகில் பயணிகள், பொருட்கள் மற்றும் கால்நடைகள் அதிகளவில் ஏற்றப்பட்டதால், படகு அதிக எடை காரணமாக ஆற்றில் மூழ்கியது. இதனால் அதில் இருந்தவர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். இந்த விபத்தில் 145 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 55 பேர் உயிர் தப்பினர். 

boat

தொடர்ந்து மீட்பு நடவடிக்கை எடுத்தபாேதும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது அதிர்வை உண்டாக்கி உள்ளது. படகில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. கால்நடைகள் அனைத்தும் இறந்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.

காங்கோவில் அடிக்கடி படகு விபத்துகள் நடக்கின்றன. காங்கோவில் பெரும்பாலான மக்கள் படகுகளில் பயணம் செய்கின்றனர். முறையான சாலை வசதி, போக்குவசதி இல்லாததும் இதற்கு காரணம். அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம். நீச்சல் தெரியாவிட்டாலும் படகுகளில் பயணம் செய்யும் போது விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனர். 
 

From around the web