செம... 14கிமீ நடனம் ஆடிக்கொண்டே கிரிவலம்!! மெய்சிலிர்க்க வைக்கும் பக்தி!!

 
பவ்யஹாசினி

பஞ்சபூத சைவ திருத்தலங்களில் அக்னித் தலமாக உலக பிரசித்தி பெற்ற ஆலயம் திருவண்ணாமலை இங்கு சிவபெருமான மலை வடிவில் இருப்பதால் மலையை கிரிவலம் வர தினசரி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு   ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர் பௌர்ணமி உட்பட  சிறப்பு நாட்களில் மலையைச் சுற்றி கிரிவலப் பாதையில்  வலம் வந்து வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சாமானியர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் திரைத்துறையினர் இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த் உட்பட   லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதை புனிதமாக கடைபிடித்து வருகின்றனர்.

பவ்யஹாசினி
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பௌர்ணமி நாட்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம்  செல்லத் தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில்  நேற்று காலை ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசித்து வரும் பவ்யஹாசினி என்ற மாணவி திருவண்ணாமலைக்கு  வந்தார். பரதநாட்டியம் கற்றுள்ள அந்த மாணவி  உலக நன்மைக்காக பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் செய்ய முடிவு செய்தார். 

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு


 அவர் அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு முதலில் வழிபாடு செய்து விட்டு நடனம் ஆடியபடியே தனது கிரிவலத்தை  தொடங்கினார்.  திருவண்ணாமலையில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் தனது நடனத்துடன் கூடிய கிரிவலத்தை தொடர்ந்தார். அதன்படி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பரதநாட்டியம் ஆடியபடியே கிரிவலம் வந்தார்.  கோயில் முன்பாக வந்ததும் தனது கிரிவலத்தை நிறைவு செய்தார். அவரின் இந்த பக்தியை கண்டு பொதுமக்கள் அங்கிருந்த கோயில் குருக்கள் உட்பட பலர் மெய்சிலிர்த்து தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web