கொச்சியில் நவம்பர் 20 முதல் முப்படைகள் புகைப்படக் கண்காட்சி! புகைப்படக் கலைஞர்களுக்கு அழைப்பு
கொச்சியில் 14-வது முப்படைகள் புகைப்படக் கண்காட்சி நவம்பர் 20 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய கடற்படையின் தெற்கு கடற்படைப் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை வார விழாவின் ஒரு பகுதியாக இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
புகைப்படக் கலைஞர்களுக்கு வாய்ப்பு
பாதுகாப்புப் படைகள் தொடர்பான நிகழ்வுகளைப் புகைப்படம் எடுத்த புகைப்படப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர்கள், அகில இந்திய அளவிலான இந்தப் போட்டியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
2025 நவம்பர் 20 முதல் 2026 அக்டோபர் 31 வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போட்டிக்குப் பரிசீலிக்கப்படும். ஒருவர் அதிகபட்சம் மூன்று புகைப்படங்களைச் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு படமும் 12×18 அங்குல அளவிலும், 300 DPI தெளிவுத்திறனுடனும் இருக்க வேண்டும்.
நவம்பர் 10 கடைசி நாள்
சமர்ப்பிக்கும் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஆங்கிலம் அல்லது இந்தியில் பொருத்தமான தலைப்பு வழங்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களை sncmilphoto@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2026 நவம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.வெற்றியாளர்களுக்குப் பணப்பரிசு, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். வெற்றியாளர்களின் பெயர்கள் நவம்பர் 22-ம் தேதி கண்காட்சியின்போது அறிவிக்கப்படும்.
