15 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!! வீட்டை விட்டு வெளியே போகாதீங்க!!

 
மழை

தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதுகுறித்து   சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில்  அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  தெரிவித்துள்ளது. அதன்படி  வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், தருமபுரி, நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  

இடி மின்னல் மழை

நீலகிரி, கோவை, தேனி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் மற்றும் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யலாம் எனத்   தெரிவிக்கப்பட்டுள்ளது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று  தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மழை

நாளை ஆகஸ்ட் 13ம் தேதி தமிழகம்,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் ஆகஸ்ட் 14 முதல் 17ம் தேதி  வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web