தஞ்சாவூரில் அரசு பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்!

 
பேருந்து கவிழ்ந்து

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை நான்குவழிச்சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். நான்குவழிச்சாலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.