தவெக நகரச் செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் ... புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதில், கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து விஜய் அறிவித்திருந்தார். தற்போது தவெக-வில் நிர்வாகிகள் நியமனமும் ஒருபக்கம் நடந்து வருகிறது.
அதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டம் தோறும் புதிய அலுவலகங்களை திறந்து வைத்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட நிர்வாகிகள் நியமனம் குறித்து கட்சி அலுவலகத்தில் மீட்டிங் நடந்தது. சட்டமன்றத் தேர்தல் 2026ல் நடக்கவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக தொடங்கி ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில் புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான், இந்த விழுப்புரம் மாவட்ட தவெக வாட்ஸ் அப் குழுவில், கட்சிப் பதவிகளுக்கு பணம் தர வேண்டுமென்றும், நகரச் செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் தர வேண்டும் எனவும் தகவல் பரவி வந்தது. அந்த வாட்ஸ் அப் குழுவில் பொதுச்செயலாளர் ஆனந்தின் நம்பரும் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சந்தித்து பேசினார். அதில் “நான் தெளிவாக சொல்கிறேன்.. யாராக இருந்தாலும், கட்சியில் பதவிக்காக பணம் வாங்கினால், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!