1576 சார்ஜிங் நிலையங்களுக்கு அனுமதி!! இ பைக், இ கார்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!!

 
சார்ஜிங் நிலையங்கள்

இந்தியாவில் தற்போது  மின்சார வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இனி  வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாறாக மின்சார வாகனங்களே அதிகம் பயன்படுத்தும் சூழல் உருவாகலாம். அதே நேரத்தில் சார்ஜிங் நிலையங்கள் பெரும்பாலான இடங்களில் இன்னும் செயல்படவில்லை.இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார்  பதில் அளித்தார்.

சார்ஜிங் நிலையங்கள்

அதில், மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, மத்திய அரசு கடந்த 2015 ஆண்டு ஃபேம் (FAME)இந்தியா என்ற திட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது. ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ரூ.1000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா திட்டம் தீவிரமாக செயல்பட அனைத்து நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டு வருகின்றன.  

இ பைக்குகள்

இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், 520 மின்னூட்டல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என விளக்கம் அளித்துள்ளார். 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web