பத்திரம் மக்களே... சென்னை உட்பட 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!

 
மழை

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில்   இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழைக்கான சூழல் நிலவி வருகிறது. \

தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடலில் மேலடுக்கு வளிமண்டல சுழற்சியும், வட தமிழக பகுதிகளில் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது.

மேலும், மன்னார் வளைகுடா முதல் மத்திய மராட்டியம் வரை தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி போன்ற அமைப்பும் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

அதன்படி, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 16 மாவட்டங்களில்   இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனிடையே, இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் திறந்தவெளிகள், உயரமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அருகே செல்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது.