16 விமானங்கள் ரத்து... கனமழையால் பயணிகள் கடும் அவதி!

 
விமானம் விமான நிலையம்

 தலைநகர் டெல்லியில் கடந்த 88 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. அத்துடன் டெல்லி  விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விபத்துக்குள்ளானது. பலத்த மழை மற்றும் விமான நிலைய மேற்கூரை விபத்து காரணமாக சென்னை டெல்லி இடையே 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்திருந்த பயணிகள்  விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முறையான அறிவிப்பு வழங்கவில்லை என  புகார் அளித்துள்ளனர். இதனால் விமானப்பயணிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தலைநகர் டெல்லியில் கடந்த 88 ஆண்டுகளில் இல்லாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.   இதனால் முக்கிய சாலைகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கிறது.  தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் முழங்கால் உயரத்திற்கும் மேலாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது .  இதனால் வாகன ஓட்டிகள்  கொட்டும் மழையில் தங்களது வாகனங்களை தள்ளிச் சென்றனர். பாலத்தின் மீது சென்ற கார்களும் நீரில் மூழ்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர் கனமழையால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அன்றாட தேவைகளுக்காக கூட வெளிவர முடியாத சூழல் நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்கியது முதலே டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு வாட்டி வதைத்து வருகிறது.  

வானிலை

இது குறித்து வானிலை ஆய்வு மையம் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.  இதே போல் அடுத்த வாரம் முழுவதும் மழை தொடரும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

From around the web