ஒரே மாதத்தில் 16 லட்சம்.. இபிஎஃப்ஓ பயனாளிகள் எண்ணிக்கை உயர்வு !

 
epfo

வருங்கால வைப்பு நிதி (EPFO) என்பது பணியாளர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம். அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கல வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இதுவே வருங்கால வைப்பு நிதி. இதில் 8.33 சதவீதம் பென்சன் திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வருங்கால வைப்பு நிதியகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படும்.

இது உலகளவில் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று, இந்தியாவில் ஊதியதாரர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை EPFO நிறுவனம் நிர்வகித்து வருகிறது. வருங்கால வைப்பு நிதி, பென்சன், இன்சூரன்ஸ் போன்ற சேவைகளையும் EPFO வழங்குகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் EPFO நிறுவனத்தில் புதிதாக 16.26 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் இது 16.5% வளர்ச்சி என மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

epfo

முந்தைய அக்டோபர் மாதத்தை காட்டிலும் நவம்பர் மாதத்தில் EPFO சந்தாதாரர்களின் எண்ணிக்கை 25.67% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் நவம்பர் மாதத்தில் இணைந்த 16.26 லட்சம் சந்தாதாரர்களில் 8.99 லட்சம் பேர் EPFO வளையத்தில் முதல்முறையாக இணைந்தவர்கள்.

புதிதாக இணைந்த 8.99 லட்சம் பேரிலும் 2.77 லட்சம் பேர் 18 முதல் 21 வயது வரம்பிலானவர்கள். அடுத்து 22 முதல் 25 வயது வரம்பிலானவர்கள் 2.32 லட்சம் பேர். ஒட்டுமொத்தமாக இணைந்த 8.99 லட்சம் புதியவர்களில் 56.60% பேர் 18 முதல் 25 வயது வரம்பிலானவர்கள். முதல்முறை வேலை தேடுவோர் ஏராளமானவர்கள் அமைப்புசார்ந்த துறைகளில் வேலைக்கு சேர்ந்துள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதுபோக 11.21 லட்சம் பேர் மீண்டும் EPFO உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் வாயிலாக தெரியவருகிறது.

From around the web