1 பந்தில் 16 ரன்கள் ! - ஸ்டீவ் சுமித் சாதனை- வீடியோ !!

 
smith

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்போன்று, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இளம்வீரர்கள் பலரும் இதில் கலக்கி வருகின்றனர். 

ஆனால், இந்தாண்டு இளம்வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித். இவர் பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) தொடர்ச்சியாக சதம் அடித்து அசத்தியுள்ளார்.

smith

சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் இடையேயான போட்டியின் போது ஸ்மித் சதம் அடித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சுமித் தனது நல்ல ஆட்டத்தை தொடர்ந்தார், அவர் போட்டியில் அரை சதத்தை அடித்தார். சுமித் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உட்பட 66 ரன்கள் எடுத்து நாதன் எல்லிஸால் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

இதற்கு மேலாக ஒரு ஆச்சரியத்தையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இரண்டாவது ஓவரில் 1 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். 33 வயதான ஜோயல் பாரிஸை நோ-பாலில் சிக்சருக்கு அடித்தார், அவருடைய பெயருக்கு ஏழு ரன்களைப் பெற்றார். பாரிஸ் பின்னர் ஒரு வைட் பந்து வீசினார், அது பைன் லெக் சென்று எல்லையை தொட்டது ஐந்து ரன்கள் கொடுத்தார். பின்னர் சுமித் ஒரு பவுண்டரி அடித்தார், ஆக மொத்தம் ஒரு பந்து வீச்சில் 16 ரன்கள் கிடைத்து உள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவை பிக் பாஷ் லீக் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.


 

From around the web