2 வாரங்களில் 1600 குழந்தைகள் உயிரிழப்பு.. காசாவில் தொடரும் சோகம்..!

 
காசா
காசாவில் 2 வாரங்களில் 1,600 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் 13 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடுமையான போரால் காசா நகரம் நரகமாக மாறியுள்ளது.  போரின் கொடூரம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது. இதனால் வல்லரசு நாடுகள் மனம் மாறி  காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக  அமெரிக்க  இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சால் மிகச்சிறிய பரப்பளவை கொண்ட காசா முனை முழுவதும் நரகமாக மாறி இருக்கிறது. தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் உத்தரவுபிறப்பித்தது.  

இஸ்ரேல் - காசா இடையே போர்

தொடர்ந்து 10 லட்சம் மக்கள் காசாவின் வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்கு  வெளியேறியுள்ளனர். மருத்துவமனையில் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் என இன்னமும் 1 லட்சம் பேர் வடக்கு பகுதியில் கடும் அவதிப்பட்டு  வருகின்றனர்.  இதுவரை இப்போரில் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 3,000த்தை தாண்டி உள்ளது. 11000 நிலைமை கவலைக்கிடமாக  உள்ளது.

இஸ்ரேல்

இந்த நிலையில் காசாவில் 2 வாரமாக நடைப்பெற்று வரும் தாக்குதலில் 1600 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யுனிஸெப் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 4000 மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் பலி உலக மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web