16,500 போலீசார் பாதுகாப்புப் பணியில்... விநாயகர் சதுர்த்திக்கு சென்னையில் 1,562 சிலைகள் வைக்க அனுமதி!

 
விநாயகர்

இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னைப் பெருநகரில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக 1,562 சிலைகள் வைக்கக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக மொத்தம் 1,562 சிலைகள் நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர்

பண்டிகையைக் கொண்டாடும் வகையிலும், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சென்னையில் மட்டும் சுமார் 16,500 போலீசார் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து முற்றிலும் இயற்கை மற்றும் சுடுமண் உள்ளிட்ட சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வழிபாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விநாயகர்

உரிய அனுமதி பெறப்படாத இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்த அனுமதி கிடையாது என்றும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி தகுந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.