167 வருட கணிதப் புதிர் ... 1.7கோடி வரிகளில் ஏஐ பிரம்மாண்ட நிரூபணம்!

 
ஏஐ

 

கணித உலகில் கடந்த 167 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த மிக முக்கியப் புதிரான 'ரீமான் கருதுகோளுக்கு' செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் தீர்வு காணப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஆந்த்ரோபிக் (மானுடவியல்) நிறுவனம் அறிவித்துள்ளது. 1859-ஆம் ஆண்டு ஜெர்மன் கணிதவியலாளர் பெர்ன்ஹார்ட் ரீமான் முன்வைத்த பகா எண்கள் தொடர்பான இந்தப் புதிருக்கான நிரூபணத்தை, அந்நிறுவனத்தின் கணிதவியலாளர் லெவென்ட் அல்போஜ் வெளியிட்டுள்ளார்.

சுமார் 4 பக்க விளக்கக் கட்டுரையுடன் 1.7 கோடி வரிகள் கொண்ட 'லீன்' கணினி நிரலாக்கக் குறியீடாக இந்தப் பிரம்மாண்ட நிரூபணம் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆராய்ச்சி, கிளாட் ஏஐ உதவியுடன் 40 நாட்களில் நிறைவடைந்துள்ளது.

இந்த நிரூபணக் குறியீட்டின் தர்க்கரீதியான சரியான தன்மையை லீன் மற்றும் கணித நூலக அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கொண்ட மில்லினியம் பரிசுப் புதிர்களில் ஒன்றான இதனை, உலகளாவிய கணிதவியலாளர்கள் ஆய்வு செய்து முழுமையாக அங்கீகரித்த பிறகே இறுதி வெற்றியாக அறிவிக்கப்படும் என கிளே கணித நிறுவனம் தெரிவித்துள்ளது