1,688 காலிப்பணியிடங்கள்... 12வது முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் ரயில்வே வாரியம் மூலம் இளநிலை அளவிலான பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தக் காலிப்பணியிடங்கள்: 1,688. வர்த்தக மற்றும் பயணச்சீட்டு எழுத்தர், இளநிலை எழுத்தர், கணக்கு எழுத்தர் மற்றும் ரயில் எழுத்தர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பு (10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.01.2027 அன்றைய நிலவரப்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).
ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை (7-வது ஊதியக் குழுவின் கீழ் லெவல் 2 மற்றும் லெவல் 3) வழங்கப்படவுள்ளது. கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrbapply.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: அக்டோபர் 15, 2026. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 13, 2026
