தீபாவளிக்கு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! பணம் அதிகம் செலவழிச்சு ஏமாறாதீங்க!

 
அரசு பேருந்துகள்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அக்டோபர்  24ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சிறப்பாக கொண்டாட பணிசெய்யும் ஊர்களிலிருந்து சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இவர்களின் பயணத்தேவையை பூர்த்தி செய்யவும்,  பொதுமக்களின் தேவைகள், வசதிகளை கருத்தில் கொண்டும் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு அக்டோபர் 22 மற்றும் அக்டோபர் 23ம் தேதி விடுமுறை நாட்களாக அமைந்துள்ளன.

அரசுப் பேருந்து

இதனால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை . இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி நாளை அக்டோபர் 21 வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் 23ம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து அரசு பேருந்து போக்குவரத்து கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன்  4,218 சிறப்பு பேருந்துகளை சேர்த்து  3 நாட்களுக்கு 10,518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போல் தமிழகத்தின் மற்ற ஊர்களில் இருந்து  3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,888பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பேருந்து
அதே போல்  தீபாவளி பண்டிகை முடிந்ததும் தமிழகத்தின் மற்ற ஊர்களிலிருந்து சென்னைக்கு அக்டோபர் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் தினசரி இயக்கப்படுன் 2,100 பேருந்துகளுடன்  3,062 சிறப்பு பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பேருந்துகள்  என மொத்தமாக 13,152 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 3 நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பேருந்துகள், 10588 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,888 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு பிறகு வரும்  3 நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பேருந்துகள், 6852 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 13,152 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web