அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 16 வயது சிறுவன் மரணம்!

 
மின்சாரம்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில் மனோஜ் (16) என்ற சிறுவன் வேலை செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.