தஞ்சையில் 16 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேர் கைது!
Sep 2, 2026, 12:50 IST
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கோயில் திருவிழாவிற்குச் சென்ற 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதியன்று நடைபெற்ற கோயில் திருவிழாவிற்குச் சென்ற சிறுமியை, அவருக்கு ஏற்கனவே அறிமுகமான சந்தோஷ் என்பவர் தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது அங்கு திடீரென வந்த சிறுவர்கள் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் சந்தோஷை அங்கிருந்து விரட்டிவிட்டு, சிறுமியைத் தீவிரமான கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் தொடர்புடைய 2 சிறுவர்கள் உள்பட மொத்தம் 5 பேரைக் கைது செய்துள்ளனர்.
