இந்தியாவில் கிளை தொடங்கும் 17 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்... மத்திய அரசு அனுமதி!

 
17

 

இந்தியாவில் தங்களது வளாகங்களைத் தொடங்க 17 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பில் விருப்பக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமலேயே, உள்நாட்டிலேயே சர்வதேசத் தரத்திலான பட்டப்படிப்புகளைக் குறைந்த செலவில் பயில வாய்ப்பு உருவாகியுள்ளது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்களது பாடத்திட்டம், ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் நியமனங்களை இந்திய வளாகங்களில் செயல்படுத்த அனுமதிக்கப்படும்.

Five Global Universities to Establish Campuses in India by 2027, ETEducation

அடுத்த கல்வியாண்டு முதல் இதில் பல பல்கலைக்கழகங்கள் தங்களது மாணவர் சேர்க்கையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உயர்கல்வித் துறையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது