17 வருட கண்ணீர் போராட்டம்.. மகனுக்காக அலைந்து திரிந்த தாய்.. உதவிக்கரம் நீட்டிய அரசு அதிகாரிகள்!
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஊனமுற்ற மகனுக்கு உதவ 17 ஆண்டுகளாக போராடிய தாய்க்கு அரசு அதிகாரிகள் உதவிக்கரம் நீட்டினர். தேசியம் பட்டி பகுதியில் கணவரை பிரிந்து வசித்து வரும் கடல் செல்விக்கு இரண்டு மகள்களும், காளி ராஜ் என்ற 17 வயது மகனும் உள்ளனர். பிறவியிலேயே கை, கால்கள் ஊனமுற்ற மகன் காளிராஜை, கைக்குழந்தை போல் தாய் காதல் செல்வி பராமரித்து வருகிறார்.

மறுபுறம், சரியான வீடில்லாத இக்குடும்பத்தின் அவல நிலையை அறிந்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தகர ஷீட் போட்டு வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி மகன் காளிராஜ் 17 ஆண்டுகளாக அரசு உதவித்தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடும் நிதி நெருக்கடியில் அவதிப்பட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இக்குடும்பத்தின் நிலை குறித்து கோட்டாட்சியரிடம் ஊடகத்தினர் வலியுறுத்தியபோது, இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், அரசு அதிகாரிகள் உடனடியாக காளிராஜை நேரில் சந்தித்து, தேவையான உதவிகளையும், சக்கர நாற்காலியையும் வழங்கினர். இந்த உதவிக்கு திருமதி தாய் கடல் செல்வி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
