1700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான் ... கதறும் ஊழியர்கள்!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு என்ற பெயரில் ஊழியர்களை கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மூடப்படுவதால் 1,700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக அமேசான் திகழ்ந்து வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சம்பளம் குறைப்பு, ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசானுக்கு உலகம் முழுவதும் பல கிளை அலுவலகங்கள் அமைந்திருக்கும் நிலையில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள பல கிளைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. எனவே அங்குள்ள 7 அலுவலங்களை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு வேலை பார்த்து வரும் 1,700 பேர் பணி நீக்கம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!