பிளஸ்-1 மாணவி பாலியல் வன்கொடுமை - 17 வயது கல்லூரி மாணவர் கைது!

 
பாலியல் பலாத்காரம் இளம்பெண்

நாகப்பட்டினம் அருகே பிளஸ்-1 மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

நாகப்பட்டினம் அருகே உள்ள கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியும், 17 வயதான கல்லூரி மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த மாணவர் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் வேம்பரசி, உதவி ஆய்வாளர் வேம்பு மற்றும் காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்தக் கல்லூரி மாணவரைக் கைது செய்தனர்.