இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் போக்சோவில் கைது!
Sep 26, 2026, 07:51 IST
சென்னை தாம்பரம் அருகே சமூக வலைதளம் மூலம் அரசுப் பள்ளி மாணவியிடம் பழகி, ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது அரசுப் பள்ளி மாணவியிடம், முத்துசாமி (22) என்பவர் இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தோழமை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

சமூக வலைதளம் மூலம் சிறுமியிடம் நெருக்கம் பாராட்டிய அந்த இளைஞர், அவருக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் விவரத்தைக் கூறவே, அவர்கள் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் முத்துசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
