17 வயது கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை - பயிற்சியாளர் போக்சோவில் கைது!

 
பாலியல்

விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளம் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பயிற்சியாளரே, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வீராங்கனைக்குக் கொடூரம் இழைத்த அசிங்கம் சென்னையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை கண்ணகி நகர் பகுதியில் 17 வயது இளம் கபடி வீராங்கனை ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், அவரது கபடி பயிற்சியாளர் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் அந்தப் பகுதியில் உள்ள இளம் மாணவ, மாணவிகளுக்குக் கபடி விளையாட்டிற்கான தொழில்முறைப் பயிற்சிகளை வழங்கி வரும் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். இவரது பயிற்சி மையத்திற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளம் பெண் ஒருவர், மாநில அளவிலான போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு கடந்த சில மாதங்களாகக் கபடி பயிற்சிக்குச் சென்று வந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

இதனைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பயிற்சியாளர் ராஜு, அந்த 17 வயது வீராங்கனைக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளார். மேலும், இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் உனது விளையாட்டு எதிர்காலத்தை நாசமாக்கி விடுவேன் எனப் பலமுறை மிரட்டி, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

பயிற்சியாளரின் தொடர் மிரட்டல்களால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம் வீராங்கனை, இறுதியாகத் தனது துணிச்சலைத் திரட்டித் தன் பெற்றோர் மூலம் கண்ணகி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை பலாத்காரம் கர்ப்பம் கர்ப்பிணி

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரைப் பெற்றுக்கொண்ட பெண் போலீசார், உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்ததை அடுத்து, 18 வயதிற்குட்பட்ட மைனர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகப் பயிற்சியாளர் ராஜு மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள கபடி பயிற்சியாளர் ராஜுவை உடனடியாகக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.