அக்காவின் கள்ளக்காதலைக் கண்டுபிடித்து கண்டித்த 17 வயது தங்கை படுகொலை; கரூரில் கொடூர சம்பவம்!

 
கள்ளக்காதல் கொலை கரூர்  சாக்கடை கால்வாய்

கரூர் பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர், தனது கள்ளக்காதல் விவகாரத்தை மூடி மறைப்பதற்காக 17 வயதான தனது சொந்த தங்கையையே கொடூரமாகக் கொலை செய்து வாய்க்காலில் வீசியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் நெரூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. இந்தத் தகவலை மறைத்து, அவர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மோகன்ராஜின் இந்த கள்ளத் தொடர்பினை அப்பெண்ணின் 17 வயது தங்கை நேரில் பார்த்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதல்

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியன்று திடீரென மாயமான அந்தச் சிறுமி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையின் முடிவில், மோகன்ராஜ் அந்தச் சிறுமியைக் கொலை செய்து வாய்க்காலில் வீசியது அம்பலமானது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

காவல்துறையினர் வாய்க்காலில் இருந்து சிறுமியின் அழுகிய உடலை மீட்டனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் மற்றும் அவரது காதலி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.