பகீர்!! மண்ணில் புதையுண்ட கிராமம்!! நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி!!

 
நிலச்சரிவு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது .  மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில்  இர்சல்வாடி  மலை கிராமத்தில்,  கனமழை  காரணமாக  பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், அந்த கிராமமே புதையுண்டு, வீடுகள் தரைமட்டமாகின.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் 16 பேரை சடலமாகவும் 20க்கும் மேற்பட்டோரை காயங்களுடனும் மீட்டனர்.


 


 இன்னும் 100க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. வானிலை சற்று இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து, மீண்டும் மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் மருத்துவக் குழுக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன.மீட்புப் பணிகளில் உள்ளூர் மற்றும் மலையேற்ற வீரர்களும் ஈடுபட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, மலையின் உச்சியில் உள்ளதாலும், மழை காரணமாக மலைப்பாதைகள் வழுக்குவதாலும் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாமல் மீட்புப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு


மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் இடைவிடாமல் பருவமழை பெய்து வருகிறது. பஞ்சகங்கா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால் கோலாப்பூரில் வெள்ளம் புகுந்தது.ஒடிசாவின் மல்கங்கிரி, கோராபுட், நவ்ரங்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், சூத்ரபாதா, மங்ரோல், கிர் சோம்நாத்  பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web