விஷ வாயு கசிவால் 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

 
வாந்தி மயக்கம்


ஆந்திர மாநிலத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி காக்கிநாடா, சர்பாபுரம் மண்டலம் வலசப்பாக்கம் பகுதியில் இயங்கி வருகிறது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி இயங்கி வரும் பகுதியின் அருகே  ரசாயன தொழிற்சாலை மற்றும் ஆயில் தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.

போலீஸ்

பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று வழக்கம் போல் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று ரசாயன தொழிற்சாலையில் இருந்து புகையின் மூலம் விஷவாயு வெளியேறியது. பள்ளி முழுவதும் இந்த விஷவாயு பரவியதில், 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு மூச்சுத் திணருவதாக கூறிய சில வினாடிகளில் மயங்கி கீழே விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள், 6,7,8-ம் வகுப்பில் இருந்த 18 மாணவர்களும் தொடர்ந்து மயங்கி விழுந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆசிரியர்கள் மற்ற வகுப்பில் இருந்த அனைத்து மாணவ, மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றி மைதானத்தில் காற்றோட்டமான இடத்தில் அமர வைத்தனர்.

விஷ்வாயு

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆம்புலன்சுடன் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு மயங்கி கிடந்த மாணவிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தற்போது  சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தி கேட்டு ஒரே நேரத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பாக குவிந்ததால் அப்பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது. விஷவாயு கசிவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web