புனித அந்தோணியார் திருத்தல 180வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியில் கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தல 180 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மறைமாவட்டம் சிலுவைப்பட்டியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா, ஆண்டுதோறும் தை மாதம் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 13 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் 180வது ஆண்டு திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமை தாங்கி கொடியேற்றி திருப்பலியில் மறையுரையாற்றினார்.

கூட்டுத் திருப்பலியில் கள்ளிக்குளம் ஸ்னோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மணி, சிறுமலர் குருமடம் ஆன்மீக இயக்குனர் சகாயஜோசப், குழந்தைராஜன் சவேரியார்புரம் பங்குத்தந்தை அமலன், டிஎம்எஸ்எஸ் இயக்குனர் சகாயஜஸ்டின், ஞானப்பிரகாசியர் பட்டனம் ஆகியோா் கலந்து கொண்டனர்.
நவநாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும் இரவு 6.30 க்கு நற்கருணை ஆசீா் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திவ்விய நற்கருணை பவனி ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை 12ம் திருவிழா அன்று மாலையில் 101 வது ஆண்டு திவ்விய நற்கருணை பனி, திருவிழா மாலை ஆராதனை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறுகிறது.

13ம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவிழா கூட்டுத்திருப்பலி, புதுநன்மை வழங்குதல் நடைபெறும். தொடர்ந்து தூய தேவ அன்னை புனித அந்தோணியார் சப்பர பவனி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை தாளமுத்துநகர் பங்குத்தந்தை மெரிஸ்லியோ, உதவி பங்குத்தந்தை பாலன், மற்றும் திரு இருதய சகோதரிகள் ஊர் நிா்வாகிகள் இறைமக்கள் செய்திருந்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
