19 ஆண்டுகால போராட்டம் வெற்றி.. ஆனாலும் தேனி மக்கள் கவலை !

 
train

மதுரை - போடி இடையே 90 கிமீ தொலைவிலான அகலப் பாதையில் தற்போது தேனி வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் போடி வரை பணிகள் முடிந்த நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மதுரை-தேனி ரயில் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. 

அதேபோல் வாரம் மூன்று நாட்களுக்கு போடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும்(20602), சென்னையில் இருந்து போடிக்கும் (20601) ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

போடி வரை ரயிலை நீடிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவும், கனவாகவும் இருந்தது. சென்னையில் இருந்து நேரடி ரயில் இயக்கப்படுவதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

train

சென்னை ரயிலைப் பொறுத்தளவில் மதுரை வரை இயங்கும் அதிவேக ரயிலே (20601) போடிக்கு நீட்டிக்கப்பட உள்ளது. மதுரையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, பெரம்பலூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்கின்றன. மேலும் தூங்கும் வசதியுடன் கூடிய பெட்டிகள் 4ம், மற்ற அனைத்தும் ஏசி பெட்டிகளுடனும் இயங்கி வருகின்றன. ஆனால் முன்பதிவற்ற பெட்டிகள் இதில் இல்லை.

12 ஆண்டுகளுக்குப் பிறகு போடிக்கு ரயில்வசதி கிடைத்துள்ளது தேனி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் முன்பதிவற்ற பெட்டி இந்த ரயிலில் இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் அதிகம் உள்ள தேனி போன்ற மாவட்டத்தில் முழுவதும் ஏசி மற்றும் முன்பதிவு பெட்டிகளுடன் கூடிய ரயில் இயக்குவது பெரியளவில் பலனை தராது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளை இணைக்க வேண்டும் என போடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web