போலி ஆவணங்கள் சமர்பித்து அரசின் திருமண மாணியத்தில் மோசடி - 194 விண்ணப்பங்கள் ரத்து!

 
திருமணம்

உத்தரப் பிரதேசத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்படும் அரசு மானியத்தைப் பெறுவதற்காகப் போலித் திருமணங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டவர்களின் 194 விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக அரசு சார்பில் ரூ.20,000 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மைன்புரி மாவட்டத்தில் இந்த மானியத் தொகையைப் பெறுவதற்காகச் சிலர் எந்தவித உண்மையான திருமணங்களும் நடத்தாமல், போலித் திருமணங்கள் மற்றும் போலி ஊர்வலங்கள் நடத்தியது போலக் காட்டியுள்ள அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது.

5வது திருமணம்

போலி அழைப்பிதழ்கள் மற்றும் தவறான வருமானச் சான்றிதழ்களைப் பயன்படுத்திச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்த்தனர். இதில் முறைகேடு உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, 194 பேரின் விண்ணப்பங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கல்யாணம்

மேலும், இது தொடர்பாகச் சந்தேகத்திற்குரிய வகையில் பெறப்பட்டுள்ள மேலும் 125 விண்ணப்பங்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தொடர்ந்து தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.