19 வயசு பையன்.. காதலித்த 22 வயசு கல்லூரி மாணவி! உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம்!

 
காதல்

19 வயசு இளைஞர்.. டிராக்டர் டிரைவராக பணி செய்து வருகிறார். அவருக்கும் 22 வயசு முதுகலைக் கல்லூரி மாணவிக்கும் காதல். உயிருக்கு பாதுகாப்பு கோரி, இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அண்மை காலமாக பெற்றோர்கள் பலர் தங்களது பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப  காதல் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் ஒரு சில பெற்றோர் காதல் என்றாலே இன்னமும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மகன், மகளின் எதிர்காலத்தின் மீதான அக்கறை ஒரு புறம் என்றாலும், இந்த காதல் எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்கிற சந்தேகமும் பெற்றோர்களுக்கு எழுவதை தவறென்று கருத முடியாத அளவிலேயே இருக்கிறது காலம். அப்படிப்பட்ட சம்பவம் தான் பொள்ளாச்சியில் நிகழ்ந்துள்ளது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தென் செங்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர், டிராக்டர் ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.

காதல்

டிராக்டர் ஓட்டுநரான இவரும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பொறியியல் கல்லூரி மாணவியும்   நட்பாக பழகி வந்த நிலையில், அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதலர்கள் இருவரும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றொருக்கு தெரியவந்தது. மகளைவிட 3 வயது குறைந்த இளைஞரை தங்களது மகள் காதலிப்பதை பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும், இந்த முறையற்ற காதலை கைவிடுமாறு மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இளம் ஜோடி

இதனால் அந்த இளம் காதன் ஜோடி, கடந்த 4-ந்தேதி விட்டைவிட்டு வெளியேறிய கோவிலில் வைத்து மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டனர். மேலும், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கோட்டூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து காதலர்கள் பெற்றோர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். பொள்ளாச்சி அருகே 19 வயதே ஆன இளைஞரை பொறியியல் படிக்கும் 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web