தனியார் பேருந்து நடைப்பாதையில் மோதி 19 வயது இளம்பெண் பலி!
கேரள மாநிலம் கோட்டயத்தில் தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது தறிகெட்டு ஓடிய விபத்தில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 19 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோட்டயத்தில் இருந்து சங்ஙனாச்சேரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அதிவேகமாகக் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையின் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 19 வயதான அஞ்சலி அஜய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
