டெங்கு காய்ச்சலால் 19 வயது இளம்பெண் பலி... 26 ஆக உயர்ந்த உயிரிழப்பு!

டெங்கு டெங்கு
 
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் டெங்குவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கராச்சியின் கோரங்கியில் வசித்த 19 வயது இளம்பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு நாளுக்குள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், அக்டோபர் 26 முதல் டெங்கு மரண எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, கண் வலி போன்ற அறிகுறிகளுடன் அதிகமானோர் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கராச்சியில் 269 பேர், ஹைதராபாத்தில் 458 பேர் என மொத்தம் 727 பேர் புதியதாக டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 271 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 171 பேர் தனியார் சுகாதார மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டிலேயே 12,000-ஐ கடந்த டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. நிலைமை மோசமாகி வருவதால், கராச்சி மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் உடனடி சுகாதார அவசரநிலை அறிவித்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் மருத்துவ சங்கம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.