காதலி இறந்த துக்கத்தில் 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 
சேலம்

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உயிருக்கு உயிராய் காதலித்து வந்த தன்னுடைய காதலி இறந்த ஒரு வார கால இடைவெளியில், துக்கத்தில் இருந்து வந்த 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

சேலம் மாவட்டம், தலைச்சோலை கிராமத்தைச் சேர்ந்த பாபுவின் மகன் ஸ்ரீகாந்த் (19). இவர் ஏற்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவர் காதலித்து வந்த இளம்பெண் உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் இருந்த ஸ்ரீகாந்த், கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்நிலையில், நேற்று மதியம் தனது தாயார் புஷ்பராணியிடம் சோடா வாங்கி வருமாறு கூறி கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது தாயார் சோடா வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வருவதற்குள் ஸ்ரீகாந்த் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.