நீட் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்த 19 வயது மாணவர் தற்கொலை - உருக்கமான கடிதம் மீட்பு!

 
நீட் சூரஜ்

மகாராஷ்டிர மாநிலத்தில் நீட் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த 19 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம், வைஜாபூர் தாலுக்காவில் உள்ள கண்டாலா கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் சுபாஷ் ஷிண்டே (19) என்ற மாணவர் தனது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

நீட் தேர்வு

வழக்கம்போலத் தனது வீட்டில், மாடியில் உள்ள அறையில் நீட் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த சூரஜ், திடீரென உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.  தற்கொலைக்கு முன்பாக சூரஜ் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதில், "என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா மற்றும் அப்பா... அடுத்த பிறவியில் நான் நிச்சயமாக உங்களுக்காக ஒரு மருத்துவர் ஆவேன். தயவுசெய்து உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்" என அவர் எழுதியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.