காதல் ஜோடியை மிரட்டி நகை, வாகனம் பறிப்பு - தவெக நிர்வாகி உட்பட 2 பேர் கைது!

 
தவெக நகைப் பறிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் அருகே தனியாகப் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்ற வழக்கில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் அருகே பொது இடம் ஒன்றில் தனியாகப் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் அவர்களது இருசக்கர வாகனத்தை பலவந்தமாகப் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காதல் ஜோடி

விசாரணையின் முடிவில், இந்தச் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஒருவர் உள்பட இருவர் ஈடுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.