தூத்துக்குடியில் கடலில் குதித்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு... படகில் சுற்றிப்பார்க்க சென்ற போது விபரீதம்!

 
தூத்துக்குடி கடலில்

தூத்துக்குடி தருவைகுளம் அருகே கடலில் சென்ற படகின் எஞ்சின் திடீரென பழுதானதால், பயத்தில் கடலில் குதித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த 7 சிறுவர்கள், ஒரு பைபர் படகில் கடலைச் சுற்றிப் பார்ப்பதற்காக உற்சாகமாகச் சென்றுள்ளனர். நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் படகின் எஞ்சின் செயலிழந்து படகு பழுதாகி நின்றது.

ஆற்றில் மூழ்கி

எஞ்சின் பழுதானதால் அச்சமடைந்த சிறுவர்களில் ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய இருவரும், நீந்தி கரைக்குச் சென்று விடலாம் எனக் கருதி நடுக்கடலில் குதித்துள்ளனர். ஆனால், கடல் அலையின் சீற்றம் மற்றும் ஆழம் காரணமாக இருவரும் நீந்த முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த கடலோரப் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் காவல் துறையினர் பலியான சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றி, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.