ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து தரையிறங்கிய 2 பிரமாண்ட சரக்கு விமானங்கள்!

 
சரக்கு விமானம் சென்னை நிலையம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கக முனையத்தில், சுமார் 150 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் பிரமாண்ட 'போயிங் 747' ரகத்தைச் சேர்ந்த இரண்டு சரக்கு விமானங்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து தரையிறங்கிச் சென்றுள்ளன.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து ஏர் அட்லாண்டா ஐஸ்லாண்டிக் நிறுவனத்தால் இயக்கப்படும் நெட்வொர்க் ஏவியேஷன் சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.

சுமார் 150 டன் சரக்குகளைத் தாங்கும் திறன் கொண்ட இந்த பிரமாண்ட விமானங்கள், சென்னையில் இறக்க வேண்டிய சரக்குகளை இறக்கியதுடன், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டிய ஏற்றுமதிச் சரக்குகளையும் முழுமையாக ஏற்றிச் கொண்டு ஹாங்காங் நோக்கிப் புறப்பட்டுச் சென்றன. சென்னை விமான நிலைய சரக்குப் போக்குவரத்தில் இந்த நிகழ்வு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.