பழனியில் கிரிவலப்பாதையில் 2 மின்சாரப் பேருந்துகள் ... பக்தர்கள் வரவேற்பு!

முருகனின் மூன்றாம் படை வீடு பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அமைந்துள்ள இந்தக் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முக்கியமான விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுகின்றனர்.
இந்நிலையில், சுமார் 3 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவல வீதியில் கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, ரோப்கார், வின்ச் மற்றும் சுற்றுலா பேருந்து நிலையங்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் ஒரு பேருந்து மற்றும் 5க்கும் மேற்பட்ட பேட்டரி கார்களும் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் பக்தர்கள் போக்குவரத்துக்கு போதுமானதாக இல்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், பக்தர்கள் போக்குவரத்துக்கு வசதியாக தனியார் நிறுவனம் சார்பில் ரூ.45 லட்சம் செலவில் 2 மின்சார பேருந்துகளும், ஒரு டீசல் பேருந்தும் வழங்கப்பட்டன. நேற்று மார்ச் 31ம் தேதி முதல் மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!