கலக்கல் ஆட்டம்!! ஆர்யன் படத்தில் விஷ்ணு விஷாலுடன் இரட்டை கதாநாயகிகள்!!

 
ஆர்யன்

 


விஷ்ணு விஷால் தனது புதிய படத்தில் 2 கதாநாயகிகளுடன் கைகோர்க்க உள்ளார். அப்படி என்றால் ரொமான்சுக்கும், டூயட்டுக்கும் பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் இப்போதில் இருந்தே உற்சாகத்தில்  உள்ளனர்.

ஆர்யன்
நடிகர் விஷ்ணு விஷாலின் புதிய படத்தில் கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் நடிக்க இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'ராட்சசன்' படத்தின் அதிரடி வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் அதிகமான ஆர்வத்தில் உள்ளார்.

அதன்படி அவரின் புதிய படத்துக்கு, 'ஆர்யன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் சஸ்பென்சுகள் நிறைந்த குற்றப் பின்னணியை மையமாக எடுக்கப்பட உள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் என 2 கதாநாயகிகளுக்கும் சரிசமமாக ரொமான்ஸ் மட்டுமல்லாமல் கதைக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால்

மேலும் இவர்களுடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக், ஜார்ஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆர்யன் படத்தை பிரவீன்.கே இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில்  நடந்து வருகிறது.சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்ஷன் படத்தில் விஷ்ணு விஷாலை மீண்டும் காண ரசிகர்கள் ஆர்வத்தில் இருந்த வேளையில் இரட்டை கதாநாயகிகள் என்ற தகவல் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web