நியூயார்க்கில் சப்வே ரயில் மோதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 நண்பர்கள் உயிரிழப்பு!

 
ரயிலில் அமெரிக்கா இந்திய வம்சவளி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாளவிகா மற்றும் நவம் கவுல் ஆகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர்.

இவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டுப் போதையில் இருந்த காரணத்தினால், தண்டவாளத்தில் ரயில் வருவதை உணராமல் விபத்தில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிவேகமாக வந்த ரயிலை உடனடியாக நிறுத்த அதன் ஓட்டுநர் முயன்ற போதிலும், எதிர்பாராதவிதமாக விபத்தைத் தவிர்க்க முடியாமல் போனதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.