நெல்லையில் பைக் மீது பேருந்து மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 
பைக் விபத்து

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை அருகே இன்று மதியம் அரசுப் பேருந்து மோதிய பயங்கர விபத்தில் சிக்கி, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடாததே இந்தத் துயர விபத்திற்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கபீர் மற்றும் ஜன்னத் ஆகிய இருவரும் இன்று தங்களது இருசக்கர வாகனத்தில் நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த பேருந்து ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் நிலைதடுமாறி கீழே விழுந்த கபீர் மற்றும் ஜன்னத் ஆகிய இருவரும் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

வண்ணாரப்பேட்டை பிரதான சாலையில் பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பெரிய பள்ளங்கள், பணிகள் முடிந்த பின்னரும் முறையாக மூடப்படாமல் அரைகுறையாகக் கிடந்துள்ளன. இந்த ஆபத்தான பள்ளங்கள் காரணமாக அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் பள்ளங்களைத் தவிர்க்க திடீரென வாகனங்களைத் திருப்புவதால் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகின்றன. அதிகாரிகளின் அலட்சியப் போக்கினாலேயே இன்று இரு உயிர்கள் பலியாகியுள்ளன என்று பொதுமக்கள் சால மறியலில் ஈடுபட முயன்றனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர், உயிரிழந்த கபீர் மற்றும் ஜன்னத் ஆகியோரின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

மேலும், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பிரதான சாலையில் நடந்த இந்த விபத்து நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.