தேனி அருகே கோர விபத்து: மரத்தின் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு!

 
கார் மரத்தின் மீது மோதி

தேனி மாவட்டம் கம்பம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள காமயகவுண்டன்பட்டியில், சண்முகா நதி அணை சாலை வளைவில் திரும்பிய கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் புளியமரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த பிரதீப் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

இவர்களுடன் காரில் பயணித்த மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.