கோயில் தேர் மின்சாரக் கம்பியில் உரசி சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி!

 
தேர் உரசி மின்சா

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கோயில் திருவிழாவின் போது எதிர்பாராதவிதமாக மின்சாரக் கம்பியில் தேர் உரசிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேப்பூர் அருகே அமைந்துள்ள கோயிலில் ஆடி வெள்ளித் திருவிழாவை முன்னிட்டுச் சிறப்புத் தேரோட்டம் நடைபெற்று வந்தது. பக்தர்கள் ஆர்வத்துடன் தேரை இழுத்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக மேல் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் தேர் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தேரை இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அண்ணாதுரை மற்றும் பரமசிவம் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சோகச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.