பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி; 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் - உத்தரபிரதேசத்தில் சோகம்!

 
பட்டாசு ஆலை வெடிவிபத்து

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் கொவன் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகத் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தின் அதிர்வில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் காவல் துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பள்ளி மானவி தற்கொலை

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமான இருவரைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த விபத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து சஹாரன்பூர் மாவட்டக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.