மகள் திருமணத்திற்கு சிறுக சிறுக சேர்த்து வைத்த 2 லட்சம்.. கரையான்கள் அரித்து தூள் தூளான சோகம்..!!

 
ஆதிமூலம் லட்சுமண ராவ், கம்பம்மா

ஆந்திராவில் தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட பணம் கரையான்களால் அரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள ஏழை கூலித் தொழிலாளி குடும்பத்தில் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் லட்சுமண ராவ், கம்பம்மா தம்பதிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.மகளின் செலவுக்கு பணத்தை சேமிக்க முடிவு செய்தார். அதன்படி யாருக்கு தெரியாமல் ரூ.2 லட்சம் பணத்தை தகர பெட்டியில் சேமித்து வந்துள்ளார்.

ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார். தனது மகளின் திருமணத்திற்கு முன்பே கோலால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கோபாலின் தகர பெட்டியை பார்த்த போது மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  அந்த பெட்டியில் இருந்த பணத்தை கரையான்கள் அரித்துவிட்டது. தூள் தூளாக கிழிந்த நோட்டுகள் மட்டுமே அதில் இருந்துள்ளது.

கோபால் ராவ் கடினமாக உழைத்து சிறுக சிறுக சேமிக்கப்பட்ட பணம் கரையான்களால் அரிக்கப்பட்டதை பார்த்து அவரது பெற்றோர் லட்சுமண ராவ், கும்பம்மா, தம்பி சின்னராவ் ஆகியோர் கதறி அழுதுள்ளனர். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கரையான்களால் அரிக்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வந்த நிலையில் பலரும் இந்த சம்பவத்திற்கு தங்கள் கவலைகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த ஏழைக்குடும்பத்திற்கு டாக்டர் ரகுராம் என்பவர் உதவி உள்ளார். அந்த குடும்பம் இழந்த தொகையான ரூ.2 லட்சம் பணத்தை அந்த குடும்பத்திற்கு வழங்கி உள்ளார். இதுகுறித்து பேசிய டாக்டர் ரகுராம், பணத்தை இழந்த அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய சோகம் என்பதை உணர்வுப்பூர்வமாகக் குறிப்பிட்டார்;. அவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

From around the web